"ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!" பிரதமர் மோடியின் ஜென்மாஷ்டமி வாழ்த்து!!
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! பிரதமர் மோடியின் ஜென்மாஷ்டமி வாழ்த்து!!
நேற்று கோகுலாஷ்டமி இந்திய முழுவது பெரிதும் கொண்டாடப்பட கூடிய ஒரு விஷேசா நாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தார். நேற்று அஷ்டமி திதி என்பதால் கோகுலாஷ்டமி அனைவரது வீட்டிலும் கொண்டாடப்பட்டது.
ஆனால், ரோகினி நட்சத்திரம் இன்று தான் தோன்றுகிறது, எனவே கோவில்களில் இந்த ரோகினி நட்சத்திரம் மற்றும் அஷ்டமி திதி இரண்டும் ஒருசேர தோன்றும் போதுதான் பூஜை செய்வார்கள். எனவே பெரும்பாலும் இன்று (7.09.2023) தான் கோவிலுக்கு சென்று கிருஷ்ணரை வழிபாடு செய்வார்கள்.
இந்த பண்டிகையானது, வட இந்தியாவில் தான் கோலாகலமாக கொண்டாடப்படும். பகவான் ஸ்ரீ கிரிஷ்னரின் நாமத்தை உச்சரித்து அவர் சரண் பணிந்து பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகைக்கு இந்திய பிரதமர் மோடி அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில்,
"ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள். பக்தி மற்றும் பக்தியுடன் கூடிய இந்த புனிதமான தருணம் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா!" என்று தெரிவித்திருந்தார்.