ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தாய்க்கும், மகளுக்கும் திருமணம்.!
உத்தரபிரதேசத்தில் தாயும், மகளும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
உத்தரபிரதே மாநிலத்தில் கோரக்பூரில் அம்மாநில அரசு 63 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளது. அதில் தாய்க்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் திருமணம் நடந்துள்ளது.
உத்தரபிரதே மாநிலத்தில் 53 வயதான பெலி தேவி என்பவரும், அவரது கடைசி மகளுமான இந்து என்பவரும் தங்களுடைய துணையை திருமணம் செயது கொண்டனர். பெலி தேவியின் கணவரான ஹரிஹர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்டார், இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர்.
பெலிதேவிக்கு, ஹரிஹாரின் தம்பி ஜகதீஷ்(55) உதவியாக இருந்து வந்துள்ளார். அதனால் அவரை கணவனாகவே ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார் பெலி தேவி. இந்நிலையில், பெலி தேவியியின் 27 வயதான இளையமகள், 29 வயதான ராகுல் என்பவரை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.
இந்தநிலையில், மாநில அரசின் உதவியுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட திருமண விழாவில் பங்கேற்று அவர்கள் திருமணம் செய்துகொண்டார். அதேபோல் அந்த நிகழ்வில் அவர்களுடன் ஜெகதீசையும் முறைப்படி திருமணம் செய்துகொண்டார் பெலிதேவி.