நள்ளிரவில் வீடு புகுந்து தாய் மற்றும் மகள் பலாத்காரம்.. கடத்தப்பட்ட கணவரின் நிலை என்ன?
Mom and girl child raped by 6 men at MP
மத்திய பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூர் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் 12 வயது மகளை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தில் கணவன் மனைவி மற்றும் 12 வயது மகள் கடந்த சனிக்கிழமை இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டிலிருந்த பணம், செல்போன் போன்றவற்றை திருடியுள்ளனர்.
பின்பு தாய் மற்றும் 12 வயது மகளை அருகில் இருக்கும் காட்டு பகுதிக்கு தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் கணவரை பணைய கைதியாக கடத்தி சென்றுள்ளனர்.
மறுநாள் காலை இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.