ஊரடங்கு உத்தரவையும் மீறி தீவிரவாதியின் இறுதிசடங்கில் பங்கேற்ற காஷ்மீர் மக்கள்!
More 1000 people gathered on funeral of terrorist
இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி சஜாத் நவாப் தாரின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாய்ஸ் ஈ முகம்மது தீவிரவாத அமைப்பை சேர்ந்த சஜாத் நவாப் தார் என்ற தீவிரவாதியை இந்திய பாதுகாப்பு படையினர் புதன்கிழமை ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டம் ஸ்போரே பகுதியில் சுட்டுக்கொண்டனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சஜாத்தின் இறுதிசடங்கில் சமூக விலகலை கடைப்பிடிப்போம் என அவரது உறவினர்கள் எழுதி கொடுத்துள்ளனர்.
ஆனால் நேற்று இரவு நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டமாக கலந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று மட்டும் 33 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மொத்த பாதிப்பு 158 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பொறுப்பில்லாமல் இறுதி ஊர்வலத்தில் மக்கள் இவ்வாறு கூடியது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.