2019 -ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் யார் யார்? முதல் இடத்தில் யார் தெரியுமா?
Most searchable names in google 2019
உலக அளவில் கூகுளில் தினம் தினம் பலகோடி பேர் ஏதாவது ஒரு விஷத்தை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் அதாவது 2019 ஆம் ஆண்டில் இதுவரை கூகிளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் யார் யார் என்ற பட்டியலில் முதல் 10 பேர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது கூகிள் நிறுவனம்.
1 . அபிநந்தன்:
இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் மீண்டுவந்த இந்திய போர் விமான வீரர் அபிநந்தன் இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.
2 . லதா மங்கேஸ்கர்:
நவம்பர் 10-16-க்கு இடைப்பட்ட நாட்களில் மூத்த பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் குறித்து இணையத்தில் அதிகம் தேடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் இவர் உடல்நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.
3 . யுவராஜ் சிங்:
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்க் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த வருடம் ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் அறிவித்தார்.
4 . ஆனந்த் குமார்:
நான்காவது இடத்தை ஆனந்தகுமார் என்பவர் பிடித்துள்ளார். ஆனந்த குமாரின் வாழ்க்கையைத் மையமாக கொண்டு, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சூப்பர் 30 என்ற திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, ஆனந்த குமார் குறித்து அதிகமாக தேடப்பட்டுள்ளது.
5 . விக்கி சௌசல்:
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து எடுக்கப்பட்ட உரி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் விக்கி சௌசல் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
6 . ஆறாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், 7 வது இடத்தில் சாலையோர பாடகியாக இருந்து பிரபலமான பாடகி ரனு மண்டல், 8 வது இடத்தில் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தில் அறிமுகமான நடிகை டாரா சுட்டாரியா, 9 வது இடத்தில் பிக்பாஸ் 13-ல் பங்கேற்ற நடிகர் சித்தார்த் சுக்லா பெற்றுள்ளார். பத்தாவது இடத்தை பாலிவுட் நடிகர் கோயினா மித்ரா பிடித்துள்ளார்.