நடுராத்தியில் மகனை பாத்ரூமிற்குள் அழைத்து சென்று துடிதுடிக்க தாய் செய்த காரியம்! வெளியான நடுநடுங்க வைக்கும் சம்பவம்!!
கடவுளுக்கு பலி கொடுப்பதாக பெற்ற மகனையே தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடவுளுக்கு பலி கொடுப்பதாக பெற்ற மகனையே தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா பாலக்காடு மாவட்டம் பூலக்காட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஹிதா. 30 வயது நிறைந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை பாலக்காடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தனது மகனை கொன்றுவிட்டதாக கூறிவிட்டு, வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அந்த முகவரிக்கு விரைந்துள்ளனர்.
அங்கு வீட்டு வாசலில் ஷாஹிதா காத்திருந்துள்ளார். மேலும் அவரது உடல் முழுவதும் ரத்தம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று கழிப்பறையில் பார்த்த போது 6 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். ஷாஹிதாவின் கணவர் சுலைமான். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 3 மகன்கள் உள்ளனர். இவர் நான்காவது மகன். மேலும் ஷாஹிதா தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார்.
ஆரம்பத்தில் அரபு நாட்டில் வேலை பார்த்து வந்த சுலைமான் தற்போது சொந்த ஊரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதனைத் தொடர்ந்து போலீசார் ஷாஹிதாவிடம் மகனை கொன்றது ஏன் என கேட்டதற்கு, அவர் கடவுளுக்கு தனது மகனைப் பலி கொடுக்க முடிவு செய்து தான் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரியாமல் சுலைமானும் அவரது மகன்களும் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். போலீசார் வீட்டிற்கு வந்த பிறகே இதுகுறித்து அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாஹிதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.