15 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்.! 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.!
15 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்.! 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.!
15 வயது மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடக மாநிலத்தின் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீண்டும் மேலும் மூன்று பேருக்கு இது தொடர்பாக 20 முதல் 22 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி நகரில் வசித்து வரும் 15 வயது சிறுமியை அவரது தாய் கீதா என்பவர் கடந்த 2020 முதல் 2021 வரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஜனவரி 27ஆம் தேதி காவல்துறையின் கவனத்திற்கு வந்தது.
பணத்திற்காக அந்த சிறுமையை, அவரது தாய் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். இந்த வழக்கு குறித்து விசாரித்த போது, 52 பேர் அந்தப் சிறுமியை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரின் மீதும் அந்த சிறுமி பலாத்காரம் செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2020 ஆம் ஆண்டு முதன்முறையாக அபிநந்தன் என்பவர் அந்த சிறுமியை தனது பாலியல் இச்சைக்காக பயன்படுத்தியுள்ளார். பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி அந்த சிறுமியை பலருக்கு இறையாக்கியது தெரிய வந்தது. கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், காவல் ஆய்வாளர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக 38 குற்ற பத்திரிக்கைகளை காவல் அதிகாரிகள் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தற்போது இது குறித்து விசாரித்த நீதிபதி சாந்தண்ணா, அந்த சிறுமியின் தாய் கீதாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அபிநந்தனுக்கு 22 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 49 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.