ஊரடங்கு! 2700 கிமீ பயணம்! உடல்நலம் பாதிக்கப்பட்ட மகனை காண தாய் செய்த நெகிழ்ச்சி காரியம்!
Mother travel 2700km to saw her ailing son
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் பி.எஸ்.எப்.பில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் உடல்நிலம் பாதிக்கப்பட்டு அருண்குமார் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரியவந்த நிலையில், அவரது தாய் ஷீலாம்மா தனது மகனை காணவேண்டும் என துடித்துள்ளார். பின்னர் அவர் மற்றும் அருண்குமாரின் மனைவி பார்வதி இருவரும் கோட்டயம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடந்தவற்றை கூறி பயணம் செய்வதற்காக அனுமதி பாஸ்களை பெற்றனர். அதனை தொடர்ந்து ஷீலாம்மா மருமகள் பார்வதி இருவரும் உறவினர் ஒருவருடன் காரில் கடந்த 11ம் தேதி புறப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 3 நாள் பயணமாக தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்கள் வழியாக ராஜஸ்தானுக்கு வந்து ஜோத்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அருண்குமாரை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஷீலாம்மா, கடவுளின் அருளால் எந்த வித பிரச்னையும் இல்லாமல் வந்து சேர்ந்துவிட்டோம். தற்போது தன் மகனின் உடல்நிலை தேறி வருகிறது. எனது மகனை பார்க்க பயணத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.