ஸ்கூட்டியில் வந்த தந்தை, மகள்..! ஸ்கூட்டியில் ஏறி இறங்கிய கார்..! நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
MP car hits bike and running video goes viral
நபர் ஒருவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிரேவந்த கார் ஒன்று அவர்களை மோதிவிட்டு நிற்காமல் சென்றதும், தந்தை அந்த காரை துரைத்திக்கொண்டே ஓடிய காட்சியும் வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் நகரில், தந்தை ஒருவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கிறார். கூட்டம் நிறைந்த அந்த பகுதியில் எதிர் திசையில் வந்த கார் ஒன்று தந்தையும், மகளும் வந்த இருசக்கர வாகனத்தை மோதி தள்ளுகிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர்.
ஆனால், காரை ஒட்டிய நபர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓடிச்செல்கிறார். கார் மிதமான வேகத்தில் இருசக்கர வாகனத்தில் மோதியதால் தந்தை, மகள் இருவரும் எந்த ஒரு காயமும் இன்றி உயிர்பிழைத்தனர். அதேநேரம், கீழே விழுந்த தந்தை, தங்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற காரை துரத்திக்கொண்டு ஓடுகிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.