×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொந்தமா ஹெலிக்கப்பட்டார் கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்.. வெளியான அதிர்ச்சி காரணம்..

தான் ஒரு ஹெலிகாப்டர் வாங்குவதற்கு தனக்கு கடன் உதவி வழங்கவேண்டும் என பெண் ஒருவர் இந்திய குட

Advertisement

தான் ஒரு ஹெலிகாப்டர் வாங்குவதற்கு தனக்கு கடன் உதவி வழங்கவேண்டும் என பெண் ஒருவர் இந்திய குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ நியூஸ் அறிக்கையின்படி, மத்திய பிரதேச மாநிலம் அகர் கிராமத்தில் வசிக்கும் பசாந்தி பாய் லோஹர் என்ற பெண் இந்திய குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "எனக்கு சொந்தமாக சிறிது பண்ணை நிலம் இருக்கிறது. அதில் விவசாயம் செய்து தான் நான் பிழைப்பு நடத்தி வருகிறேன். ஆனால் மற்றொரு விவசாயி பர்மானந்த் பட்டிதார் மற்றும் அவரது இரண்டு மகன்களான லவ் மற்றும் குஷ் ஆகியோர் தனது நிலத்திற்கு செல்லும் வழியை மறித்து அடாவடி செய்து வருகிறார்கள்.

இதனால் என்னுடைய நிலத்திற்கு சென்று, என்னால் பிழைப்பு நடத்த முடியவில்லை. இதனால் தான் வான் வழியாக தனது நிலத்தை அடைய தனக்கு ஒரு ஹெலிகாப்டர் வேண்டும் எனவும், அதை வாங்கும் அளவுக்கு பணம் இல்லாததால் அதனை வாங்க கடன் வழங்க உத்தரவிடுங்கள் எனவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், இதற்கான உரிமம் மற்றும், விவசாயம் மேற்கொள்ள வேண்டி, விவசாயக் கருவிகளையும் எனக்கு கொடுங்கள்" எனவும் அந்த பெண் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளை பலமுறை சந்தித்தும், புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் அந்த பெண் இந்த கடிதத்தை குடியரசு தலைவருக்கு எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் தற்போது சமூகவலைத்தளங்கள், இணையதளங்களில் வெளியாகி கடும் வைரலாகிவருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணிற்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral News #Mysterious news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story