சுப்பிரமணியபுரம் பட ஸ்டைலில் ஆட்டோவில் வைத்து கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை.... மும்பையில் அதிர்ச்சி சம்பவம்.!
சுப்பிரமணியபுரம் பட ஸ்டைலில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை.... மும்பையில் அதிர்ச்சி சம்பவம்.!
மும்பை நகரில் ஓடும் ஆட்டோவில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையின் தத் நகரில் அமைந்துள்ள கைராணி சாலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆண் ஒரு கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் துடித்து அலறிய பெண் அந்த நபரிடமிருந்து தப்பிப்பதற்காக ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த நபரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கும் என்று உள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த நபர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையை உடனடியாக தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்தப் பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் அந்த ஆணுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு ஏன் அந்த நபர் இந்தப் பெண்ணை கொடூரமாக கொலை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விசாரணை செய்து வருகிறது. மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் சாந்திவிலி சங்கார்ஷ் நகரை சேர்ந்த பஞ்சசீலா ஜாம்தார் என்பதும், அவரை கொலை செய்தவர் தீபக் போர்சே என்பதும் தெரியவந்தது.