அக்னிவீர் பயிற்சியில் ஈடுபட்ட 20 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காதல் பிரச்சனையில் விபரீதம்?.!
அக்னிவீர் பயிற்சியில் ஈடுபட்ட 20 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காதல் பிரச்சனையில் விபரீதம்?.!
மத்திய அரசு சமீபத்தில் இராணுவத்தின் வலிமையை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்திடவும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அக்னிவீர் திட்டத்தினை அறிமுகம் செய்தது.
இதன் வாயிலாக முப்படையிலும் பணியாற்ற வீரர்கள் தகுதியின் அடிப்படையில் செய்யப்படுவார்கள். பின் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, ஐஎன்எஸ் கம்லா கப்பலில், அக்னிவீர் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்று வந்த 20 வயது இளம்பெண் அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவாறு சடலம் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மும்பை மால்வாணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பயிற்சியின்போது உயிரிழந்ததால், இராணுவ மரியாதைகள் ஏதும் வழங்கப்படாது என இராணுவம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அபர்ணா நாயர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதல் ஜோடியிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.