5 நாட்களாக தொடர் சரிவால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.17.5 இலட்சம் கோடி இழப்பு.!
5 நாட்களாக தொடர் சரிவால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.17.5 இலட்சம் கோடி இழப்பு.!
இந்தியாவின் பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை ஆகியவற்றில் கடந்த 5 நாட்களாக தொடர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 5 நாட்களாக ஏற்பட்ட சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், 1,515.35 புள்ளிகள் சரிந்து 57,521.83 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதனைப்போல, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 37.80 புள்ளிகள் சரிந்து 17,179.35 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இதனால் கடந்த 5 வர்த்தக நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.17.5 இலட்சம் கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 17 ஆம் தேதி முதல் சென்செக்ஸ் 3,300 புள்ளியும், நிஃப்டி 1,100 புள்ளியும் சரிந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.