அடேங்கப்பா.. 24 வருடத்திற்கு முன்னர் மாயமான தங்க நகைகள் மீட்பு.. உரியவரிடம் ஒப்படைப்பு.!
அடேங்கப்பா.. 24 வருடத்திற்கு முன்னர் மாயமான தங்க நகைகள் மீட்பு.. உரியவரிடம் ஒப்படைப்பு.!
கடந்த 24 வருடத்திற்கு முன்னதாக மாயமான தங்க நகைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருடுபோன நகைகள் கிடைத்த குஷியில், குடும்பத்தினர் காவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையின் நுழைவு வாயிலாக கருதப்படும் கோலபா பகுதியில், அர்ஜன் தேஸ்வானி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 1998 ஆம் வருடம் திருட்டு நடந்துள்ளது.
வீட்டில் வந்து கொள்ளையடித்தவர்கள் 2 தங்க நாணயம், 3 தங்க நகைகள், 2 மோதிரங்கள் போன்றவற்றை திருடி சென்றனர். இந்த நகைகள் மற்றும் நாணயத்தின் இன்றைய மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 1998 ஆம் வருடம் நடந்த திருட்டு தொடர்பாக அர்ஜன் தேஸ்வானி குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த நிலையில், நகைகள் நேற்று வரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், குற்றவழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்கையில், அவரிடம் இருந்து அர்ஜன் தேஸ்வானியின் குடும்பத்தினருக்கு சொந்தமான நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நகைகளை உரியவரிடம் ஒப்படைக்கும் பொருட்டு, கோலபா காவல் துறையினர் அர்ஜன் தேஸ்வானி குடும்பத்தினரிடம் அவர்களின் தங்க நகைகளை ஒப்படைத்தனர். கடந்த 24 வருடத்திற்கு முன்னதாக திருடுபோன தங்க நகைகள் கிடைத்த மகிழ்ச்சியில், காவல் துறையினருக்கு தேஸ்வானி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.