கட்டுமான பணிகளின்போதே விபரீதம்; திடீரென இடிந்து விழுந்த பாலம்.. காத்திருந்த அதிஷ்டம்.. பதைபதைப்பு வீடியோ உள்ளே.!
கட்டுமான பணிகளின்போதே விபரீதம்; திடீரென இடிந்து விழுந்த பாலம்.. காத்திருந்த அதிஷ்டம்.. பதைபதைப்பு வீடியோ உள்ளே.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை - கோவா நான்குவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
அங்குள்ள சிபலுன் பகுதியில், கொங்கன் பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன.
இந்நிலையில், கிரேன் உதவியுடன் பாலத்தின் கட்டுமான பணிகள் நேற்று மதியம் 02:45 மணியளவில் நடந்து வந்தது.
அப்போது, திடீரென பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. நல்ல வேலையாக இவ்விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
சுமார் 30 மீட்டர் தூரம் கட்டுமான பணிகள் நடந்து வந்த பாலம் அப்படியே இடிந்து விழுந்துள்ளது. சாலையின் நடுவே பாலம் அமைக்கப்பட்டபோதிலும், நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.