இரயில் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டான்ஸ்: கவனிப்புக்கு பின் பதுங்கிய பெண்.!
இரயில் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டான்ஸ்: கவனிப்புக்கு பின் பதுங்கிய பெண்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை இரயில் நிலையத்தில், கடந்த டிசம்பர் 04ம் தேதி இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுக்க பொதுமக்களை எரிச்சலடைய வைக்கும் வகையில் நடனமாடி வீடியோ வெளியிட்டார்.
பெண்ணின் செயல்பாடுகளை கண்ட ஒருவர், சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இதனையடுத்து, மும்பை இரயில்வே காவல் துறையினரின் கவனத்திற்கு விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணை மேற்கொண்ட இரயில்வே காவல்துறையினர், சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட பெண்மணியை கண்டறிந்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தக்க அறிவுரை வழங்கினர்.
இதனையடுத்து, பெண் தன்னைப்போல யாரும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. பொதுமக்களுக்கு எவ்வகையிலும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட கூடாது. அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.