24 வயது இளம்பெண் பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு.. முக்கிய அரசியல் தலைவர் மீது பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!
24 வயது இளம்பெண் பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு.. முக்கிய அரசியல் தலைவர் மீது பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளும் கட்சியான சிவசேனா கட்சியின் துணைத்தலைவராக இருப்பவர் ரகுநாத் குச்சிக். இவருக்கு எதிராக 24 வயது இளம்பெண் பரபரப்பு பாலியல் பலாத்காரம் மற்றும் கட்டாய கருக்கலைப்பு புகாரை முன்வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் அளித்துள்ள புகாரில், "கடந்த நவம்பர் 6, 2020 ஆம் வருடத்தில் சிவசேனா கட்சியின் துணைத்தலைவர் ரகுநாத் குச்சிக் என்னை திருமணம் செய்வதாக கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது, எனக்கு 21 வயது நடந்து வந்தது.
அதனைத்தொடர்ந்து, பல்வேறு காலகட்டங்களில் என் விருப்பத்திற்கும் மாறாக புனே, கோவா போன்ற பல இடங்களுக்கு அழைத்து சென்று ரகுநாத் குச்சிக் பலாத்காரம் செய்தார். அதனால் நான் கர்ப்பமானேன். இந்த தகவலை அவரிடம் தெரிவித்து, திருமணம் செய்யுமாறு கூறியபோது, அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். மேலும், என்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார்.
கருக்கலைப்பு செய்யாத பட்சத்தில், என்னை கொலை செய்திடுவதாகவும் மிரட்டினார். நானும் வேறு வழியின்றி கருக்கலைப்பு செய்த நிலையில், திருமணம் செய்யுங்கள் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அவர் என்னை திருமணம் செய்யமாட்டேன் என்று சமீபத்தில் தெரிவித்துவிட்டார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள காவல் துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த புகார் தொடர்பாக ரகுநாத் குச்சிக் தெரிவிக்கையில், "வழக்கை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன். எனக்கும், என் குடும்பத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் பொருட்டு பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.
அவரின் விருப்பம் என்னிடம் இருந்து பணத்தை வாங்குவது தான். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. காவல் துறையினரின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். ஹனி டிராப் முறையில் என்னிடம் பணம் பறிக்க பெண்மணி திட்டமிட்டு இருக்கிறார். எனக்கு நீதி கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.