#Breaking: மாடுகள் மீது மோதி உடைந்த இரயில் எஞ்சின்.. பயணத்தை தொடங்கிய வேகத்தில் விபத்து..! பயணிகள் அதிர்ச்சி..!!
#Breaking: பயணத்தை தொடங்கிய வேகத்தில் வந்தே பாரத் இரயில் விபத்து.. மாடுகள் மீது மோதி உடைந்த இரயில் எஞ்சின் பாகங்கள்..!
கூட்டமாக சென்ற மாடுகளின் மீது மோதிய இரயிலின் முன்பக்க இன்ஜின் பாகங்கள் உடைந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
தொலைதூர இரயில் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் பொருட்டும், இந்திய இரயில்வேயை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலும், இந்தியதிருநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட புல்லட் இரயில்களுக்கான முன்னோட்ட இரயில்கள் வந்தே பாரத் இரயில். இந்தியா முழுவதும் வெவ்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் பல வந்தே பாரத் இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் இரயில் விபத்திற்குள்ளாகியுள்ளது. மும்பை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலத்தின் காந்தி நகருக்கு வந்தே பாரத் இரயில் இன்று சென்றுகொண்டு இருந்தது.
இந்த இரயில் காலை 11:30 மணியளவில் மணிநகர் இரயில் நிலையத்தில் இருந்து வாட்வா இரயில் நிலையத்திற்கு இடையே பயணம் செய்த போது, அவ்வழியாக சென்று பசு&எருமை கூட்டத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இரயிலின் முன்புற பகுதி உடைந்து கீழே விழுந்துள்ளது.