ஒருவரை அடித்தே கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பல்! பகிர் தகவல்!!
ஒருவரை அடித்தே கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பல்! பகிர் தகவல்!
அசாமில் உள்ள ஹோஜாய் என்னும் மாவட்டத்தில் நேற்றைய தினம் மர்ம நபர் ஒருவர் இரண்டு எருமை மாடுகளை நள்ளிரவு நேரத்தில் திருட முயற்சித்ததாக சந்தேகித்த ஆறு பேர், அந்த நபரை சராமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த நபரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த விபரம் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பலியானவர் ஹோஜாய் மாவட்டத்தில் வசித்து வரும் 40 வயதுடைய ஹிஃப்சுர் ரகுமான் என்பவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரஹ்மானின் குடும்பத்தினர் காவல்துறையில் நேற்று மாலை புகார் அளித்ததை தொடர்ந்து ரஹ்மானை தாக்கிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்தது. பின்னர், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.