மூங்கிலை இயற்கை குழாயாக பயன்படுத்தி அசத்தும் கிராம மக்கள்.!
மூங்கிலை இயற்கை குழாயாக பயன்படுத்தி அசத்தும் கிராம மக்கள்.!
மூங்கில் புல் வகையினை சார்ந்த மரம் ஆகும். நாளொன்றுக்கு 1 மீட்டர் வரை அதிகபட்சமாக வளரும் மூங்கிலின் ஆயுட்காலம் 59 நாட்கள் ஆகும். மூங்கில் மரங்கள் தான் உயிர்வாழும் காலங்களில் தனக்குள் நீரை சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை ஆகும். இது அனைவருக்கும் தெரிந்த தகவல் தான்.
ஆனால், வயது மூப்படைந்த மூங்கில் மரத்தை வைத்து, அதனை தண்ணீர் பைப் போல உபயோகம் செய்து வரும் செயல்முறை நடந்து வருகிறது என்ற ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. நாகலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இயற்கையை வாழ்க்கைமுறைக்கு உபயோகம் செய்யும் பொருட்டு, மூங்கிலை தண்ணீர் குழாய் போல உபயோகம் செய்கின்றனர்.
தனது வாழ்நாட்களை முடித்துக்கொண்ட மூங்கிலை எடுத்து வந்து, பண்டிகை நாட்கள் அல்லது ஊரில் பொதுவாக கை-கால்களை சுத்தம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அதனை வைத்து, அதற்குள் நீரை செலுத்தி அங்கங்கே சிறுசிறு துளைகள் இட்டு, அதனை அடைத்து வைக்கவும் மரக்குச்சிகளை சொருவி பயன்படுத்தி வருகின்றனர்.
கை-கால்களை சுத்தம் செய்ய விரும்பும் நபர், அடைப்பை எடுத்துவிட்டு கைகளை சுத்தப்படுத்தி, பின்னர் அதனை அடைத்து வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் இதுபோன்ற மூங்கில் குழாய் திருமணம் மற்றும் பிற பண்டிகை காலத்தில் உபயோகம் செய்யப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையின் தோழன் என்று கூறுவதோடு மட்டுமல்லாமலால், கிராமத்தினர் எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது.