பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஜர் ஜெனரலுக்கு ராணுவ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!
nagalanthu militry court good judgement
நாகலாந்தில் பெண் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த மேஜர் ஜெனரலை குற்றவாளி என ராணுவ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நாகலாந்தில் உள்ள அசாம் ரைபிள்சுக்கு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் எம்.எஸ்.ஜஸ்வால். இவரது தலைமையின் கீழ் பணியாற்றிய கேப்டன் அந்தஸ்தில் இருந்த பெண் அதிகாரி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார். ஒருநாள் அவரை அறைக்கு தனியாக அழைத்து அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.
இதுதொடர்பாக, அவரின் மீது பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் சண்டிகரில் உள்ள மேற்கு மண்டல ராணுவ அலுவலகத்தில் லெப்ட்டினண்ட் ஜெனரல் தலைமையிலான ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையின் முடிவில் வெளியான இறுதி தீர்ப்பின் படி, ஜஸ்வால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவரை பணிநீக்கம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது