"உலகை வென்றவர்" - நரேந்திர மோடி; இந்திய பிரதமருக்கு விருது வழங்கும் ஐ.நா சபை!!
narendra modi - i.na - viruthu valankappadukirathu
உலக நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபை ( ஐ.நா) ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றிவரும் நபர்களுக்கு 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' (உலகை வென்றவர்கள் ) என்ற விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டு இந்த விருது இந்திய பிரதமர் மோடிக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியதற்காக வழங்கப்படும் என்று ஐ.நா அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 'சர்வதேச சோலார் கூட்டமைப்பு' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் முக்கிய நோக்கம் உலக நாடுகளில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான். இந்த கூட்டமைப்பின் மூலம் அனைத்து நாடுகளிலும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 121 நாடுகள் கூட்டமைப்பில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் முக்கிய பங்காற்றி வருகிறார். இதனால் மோடியுடன் இணைந்து அவருக்கும் இந்த ஆண்டுக்கான 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' (உலகை வென்றவர்கள்) விருது வழங்கப்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.