நீட் தேர்வில் மாற்றம் தேவைப்பட்டால் பரிசீலனை செய்ய வேண்டும்!. இல்லையென்றால் கோர்ட்டு தலையிடும்: தலைமை நீதிபதி எச்சரிக்கை..!
நீட் தேர்வில் மாற்றம் தேவைப்பட்டால் அதனை பரிசீலனை செய்ய வேண்டும்!. இல்லையென்றால் கோர்ட்டு தலையிடும்: தலைமை நீதிபதி எச்சரிக்கை..!
மருத்துவக் கல்வி கொள்கையில் மாற்றம் தேவை என்பதற்கான அடையாளமாக நீட் தேர்வு வழக்குகள் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார். டெல்லியில் இயங்கிவரும் கங்கா ராம் நினைவு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நீட் தேர்வு வழக்குகள் குறித்து கூறியதாவது:-
நீட் தேர்வு குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அதிக அளவில் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையே மருத்துவக் கல்வி கொள்கையில் மாற்றம் தேவை என்பதை உணர்த்துகிறது. நீட் தேர்வு குறித்து நிலுவையில் உள்ள வழக்குகள் மருத்துவக் கல்வி கொள்கையில் மாற்றன் தேவை என்பதற்கான அடையாளம்.
நீதிமன்றங்கள், மத்திய அரசின் கொள்கை சார்ந்த விஷயங்களில் அவப்போது தலையிட முடியாது. இருந்த போதிலும், மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதுடன் பரிசீலனை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. ஒருவேளை மாணவர்களின் நலனுக்கு எதிராக ஏதேனும் இருந்தால் அதில் தலையிட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.