தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்.. அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளியின் தொடையை துண்டித்த மருத்துவர்கள்..!
தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்.. அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளியின் தொடையை துண்டித்த மருத்துவர்கள்..!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தளவாய்பள்ளியில் வசித்து வருபவர் புஷ்பம்மா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தவறி விழுந்ததில் காலில் அடிபட்டுள்ளது. இதனால் வலியில் துடித்த புஷ்பம்மாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பம்மாவின் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். மேலும் தொடையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி புஷ்பம்மாவிற்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பம்மாவின் குடும்பத்தினர்கள் இது தொடர்பாக மருத்துவமனை டீனிடம் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் உறுதி அளித்துள்ளார். மேலும் அரசு மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.