வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டுகள்! பழைய 20 ரூபாய் நோட்டுகளின் நிலை?
New 20 rupee note coming soon
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 12 மணிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து புதிய 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.
இதனையடுத்து ரிசர்வ் வங்கி தற்போது புழக்கத்தில் இருக்கின்ற ரூ. 100, ரூ.20 மற்றும் ரூ.50 போன்ற நோட்டுகளை புதிய வண்ணத்தில் அச்சிட்டு வெளியிட முடிவு செய்தது.
அதன்படி ரூ.50, ரூ.100 ஆகிய நோட்டுக்களை அச்சிட்டு தற்பொழுது புழக்கத்தில் இருந்து வருகிறது. அதன்படி ரூ.20 மட்டும் இன்னும் அச்சிட்டு வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி புதிய ரூ.20 நோட்டையும் அச்சிட்டுள்ளது.
இந்த புதிய நோட்டில், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் 20 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பின்னரும், பழைய 20 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. விரைவில் இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் மக்களிடையே புழக்கத்துக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.