இனி யாரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முடியாது! மத்திய அரசின் அதிரடி சட்டம்! 1 லட்சம் வரை அபராதம்!
new act for Motor vehicle drivers
நேற்று மாநிலங்களவையில் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மசோதா தாக்கலின் போது பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதிகட்கரி, இந்தியாவில் தற்போது ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதில் 1.5 லட்சம் பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்.
திருத்தம் செய்து நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டத்தின்படி, முறையாக சாலை விதிகளை பின்பற்றாமல், ஹெல்மெட் அணியாமல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தொகையை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது அதற்கான தண்டனையாக இனி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி குறைந்தபட்ச அபராதம் என்பது ரூ. 100 ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஆபத்தான வகையில் வேகமாக வாகனத்தை ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என இருந்தது. ஆனால் அது இனி 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால் அபராதம் 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கிறது. அனுமதி இல்லாத வாகனங்களை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் தற்போது இருந்த நிலையில், இனி 10 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காப்பீடு இல்லாத வாகனத்தை ஓட்டினால் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருந்த நிலையில் அது இனி 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கிறது.
சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவ்வாகனத்தின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்படும். மேலும் வாகனத்தை ஒட்டிய சிறுவர் மீதும் சிறார் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வாகனத்திற்கான விதிகளை கடைபிடிக்காமல் இருந்தால். 100 கோடி மேல் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் ஆண்டுதோறும் இந்த அபராதத் தொகை 10 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிப்பட்டுள்ளது.