திருமணமான சில நாட்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த புதுப்பெண்! உயிருக்கு போராடும் கணவன்! வெளியான பதறவைக்கும் அதிர்ச்சி காரணம்!!
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த ஏப்ரல் 30ந்தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த நிலையி
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த ஏப்ரல் 30ந்தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த நிலையில் திருமணமான மறுநாள் புதுப்பெண் அவரது கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். வந்த சில நாட்களிலேயே அவருக்கு காய்ச்சல் மற்றும் கடுமையான உடல்வலி இருந்து வந்துள்ளது. ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்து வைத்தியம் பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் அவரது குடும்பத்தார்கள் அவரை அருகில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி 25 வயது நிறைந்த அந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். மேலும் மனைவியை கவனித்து வந்த புது மாப்பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவரும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களது திருமணத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் எனவும், சடங்குகளுக்காக மாஸ்க்கை கழட்டிய நிலையில் கொரோனா பரவி இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..