ரயிலில் ஸ்லீப்பர் கிளாசில் (Sleeper class) பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
New type of sleeper beds introduced in indian trains
இந்திய ரயில்களில் மர ஸ்லீப்பர்களுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதைப்பற்றி கூறுகையில் மரக்கட்டை ஸ்லீப்பர்களால் அசவுகரியம் ஏற்படுவதாக பயணிகளிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்தன. இதனால், ஒரு குறிப்பிட்ட வழியில், காம்போசிட் ஸ்லீப்பர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை, இரும்பு, நாரால் (எக்குநார் பிளாஸ்டிக்) செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற படுக்கை வசதிகள் 2003-ம் ஆண்டில் முரதாபாத்தில்தான் காம்போசிட் ஸ்லீப்பர்கள் ஸ்லீப்பர்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் அதன்பிறகு இந்த கலப்பு ஸ்லீப்பர்கள், கடந்த 2016-ம் ஆண்டில் 10 மண்டலங்களில் செயல்படுத்தப்பட்டன. இப்போது, எல்லா பகுதிகளிலும் மரக்கட்டை ஸ்லீப்பர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு எக்குநார் பிளாஸ்டிக் ஸ்லீப்பர்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புதுவகை ஸ்லீப்பர்களால் பயணிகள் மிக சவுகரியமாக தூங்கமுடியும் என்றும் மேலும் இதன் விலை முந்தய ஸ்லீப்பர்களை வீட்டா மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.