நாளை தூக்கு தண்டனை.! இந்நேரத்தில் நிர்பயா குற்றவாளியின் மனைவி எடுத்த அதிரடி முடிவு..!
Nirpaya case accused akhay kumar wife asked divorce
நாட்டையே உலுக்கிய மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கொலை குற்றவாளிகள் நாளை அதிகாலை 5 . 30 மணியளவில் தூக்கிலபடவுள்ளனர். இந்நிலையில், என் கணவன் இறந்த பிறகு விதவை பெண்ணாக தான் வாழ விரும்பவில்லை எனவும், தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும் குற்றவாளிகளில் ஒருவனான அக்ஷய் குமாரின் மனைவி புனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழக்கங்கப்பட்ட தூக்கு தண்டனை பல்வேறு காரணங்களால் அடுத்ததடுத்து மாற்றப்பட்டது.
இந்நிலையில், நாளை (மார்ச் 20) குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், தனது கணவர் அப்பாவி எனவும், அவர் இறந்த பின்னர் தான் விதவையாக வாழ விரும்பவில்லை எனவே அவர் இறப்பதற்க்கு முன்னதாகவே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் குற்றவாளிகளில் ஒருவனான அக்ஷய் குமாரின் மனைவி புனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று (மார்ச் 19) நீதிமாற்றத்தில் நடைபெறும் என தெரிகிறது. கணவன் மீது பாலியல் குற்றம், கொலை குற்றம் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற மனைவிக்கு சட்டப்படி உரிமை இருப்பதாக புனிதாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.