கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்தியானந்தா.!
nithiyananda issued kailash coins
நித்தியானந்தா சமீபத்தில் ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார். அதன்படி, ஈக்வடாரில் ஒரு தீவை வாங்கியதாக முந்தைய தகவல்கள் வந்ததும், அதை ஈக்வடார் அரசு மறுத்தது.
இந்த நிலையில் கைலாசா நாட்டை அமைந்துள்ளதாக கூறும் நித்யானந்தா, மத்திய வங்கியை உருவாக்கியுள்ளதாகவும் அதன் தொடர்ச்சியாக கைலாசா பணத்தை அச்சிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர் வரும் விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார்.
அதற்கு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்தார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை இன்று நித்யானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார். 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.