கைலாசா தனிநாடு அமைந்தே தீரும் -நித்யானந்தா! குடியுரிமைக் கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்!
Nithiyanantha talk about kalilasa
தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டும் விவகாரங்களில் ஒருவர் தான் நித்யானந்தா. அவர் மீது குழந்தைக் கடத்தல், பாலியல் புகார் என குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் வழக்கம்போல் சமூக வலைத்தளத்தில் சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, 2003ஆம் ஆண்டு தான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை என குறிப்பிட்டார்.
தன் மீது எழுந்த அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தான் நிரபராதி என நிரூபித்துள்ளதாக கூறிய அவர் ஆன்மீகத் துறையில் தான் என்றோ தலைவனாகிவிட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் கூறினார்.
ஆனால் 18ஆம் தேதி புதன்கிழமை நித்யானந்தாவை கண்டுபிடிக்க பெங்களூரு காவல்துறைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.