×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5%-க்கு மேல் கொரோனா பாசிட்டிவிட்டி இருந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - ஐ.சி.எம்.ஆர் அலெர்ட்..!

5%-க்கு மேல் கொரோனா பாசிட்டிவிட்டி இருந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - ஐ.சி.எம்.ஆர் அலெர்ட்..!

Advertisement

மாவட்ட அளவில் கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம் 5 % க்கு மேல் இருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என நிதி ஆயோக் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறையின், நிதி ஆயோக் குழு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பேசிய நிதி ஆயோக் குழு உறுப்பினர்கள், "இந்தியாவில் பலரும் முகக்கவசத்தை தற்போது உபயோகம் செய்யவில்லை.

இது மிகப்பெரிய தவறான விஷயம். உலக நாடுகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலை நாடுகள் பலவும் ஓமிக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. நவ. 24 ஆம் தேதி வரை 2 நாடுகளில் மட்டும் பரவியிருந்த ஓமிக்ரான், இன்று 59 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திருந்தாலும், முகக்கவசம் அணிவதை மறுக்க கூடாது" என்று தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பேசிய ஐ.சி.எம்.ஆர் பலராம் பார்கவ், "மாவட்ட அளவில் 5 விழுக்காடுக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பட்சத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ICMR #NITI Aayog #Health #Omicron Variant #Corona virus #Facemask
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story