×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இனி ஆதார் கார்டை இலவசமாக இணையத்தில் நீங்களே புதுப்பித்துக் கொள்ளலாம்.... மத்திய அரசு அறிவிப்பு...!!

இனி ஆதார் கார்டை இலவசமாக இணையத்தில் நீங்களே புதுப்பித்துக் கொள்ளலாம்.... மத்திய அரசு அறிவிப்பு...!!

Advertisement

இணையத்தில் ஆதார் அட்டை புதுப்பிக்கும் சேவை ஜூன் 14-ந்தேதி வரை இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் கார்டு விவரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்கு இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு ஆதார் கார்டு பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

மார்ச் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை இந்த சேவை இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை 'my Aadhaar' எனும் இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் வழக்கம்போல் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனாளர்கள் 'myaadhaar.uidai.gov.in' எனும் இணைய தளத்தில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Aadhaar Card #Update #Online for free #Central Govt Notification
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story