யூ-டியூபில் நிர்வாணப்படம்!.. இளம் பெண்ணின் மிரட்டலால் வாலிபர் செய்த காரியம்: அதிர்ச்சி சம்பவம்..!
யூ-டியூபில் நிர்வாணப்படம்!.. இளம் பெண்ணின் மிரட்டலால் வாலிபர் செய்த காரியம்: அதிர்ச்சி சம்பவம்..!
பணம் கொடுக்காவிட்டால் நிர்வாண படங்களை யூடியூபில் வெளியிடுவேன் என இளம்பெண் மிரட்டியதால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவில் வசிப்பவர் முரளி(19). கூலித்தொழிலாளியான முரளி வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் அதிக நேரம் முகநூலில் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் புகைப்படத்துடன் ப்ரியாஷர்மா என்ற பெயரில் அவருக்கு நட்பு கோரிக்கை வந்துள்ளது.
அதை பார்த்த முரளி உடனடியாக நட்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்து அந்த பெண் முரளிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை தொடர்ந்து இருவரும் குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளனர். இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு நண்பர்களாக பழக ஆரம்பித்தனர். தினமும் வீடியோ காலில் இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண், வீடியோ காலில் பேசிய முரளியின் வீடியோக்களை நிர்வாணமாக மார்பிங் செய்து அவருக்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்தவுடன் முரளி அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அந்த பெண்ணை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், நான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், இந்த நிர்வாண படங்களை யூடியூப்பில் வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார்.
நான் கூலித்தொழிலாளி என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என முரளி கூறியுள்ளார். ஆனால் அந்த பெண், பணத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று எச்சரித்துள்ளார். தொடர்ந்து மிரட்டியதால், அந்த இளம்பெண்ணிடம் பேசிய முரளி, நீ அவ்வாறு செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
அந்த பெண் முரளி கூறியதை கண்டுகொள்ளாததால் மனவுளச்சலுக்கு உள்ளான முரளி நேற்றிரவு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வி.கோட்டா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.