கொரோனா எதிரொலி: ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்தது ஒடிசா அரசு..!
Odisa government extended the oradanku
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இந்நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் வரும் 11 ஆம் தேதி முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஊரடங்கு நீட்டிகலாமா? இல்லையா? என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.
ஆனால் தற்போது ஒடிசாவில் ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த முடிவுகள் ஒடிசாவில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கல்வி நிலையங்கள் வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.
ஆனால் ஒடிசா மாநிலத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கொரோனாவால் குறைவான பாதிப்பே ஏற்ப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் முதல் மாநிலமாக ஊரடங்கை நீட்டித்துள்ளது.