அதிர்ச்சி! ஓலா கால் டாக்சிக்கு அதிரடி தடை! அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு!
Ola call taxi banned for next six months in Bangalore
சென்னை, பெங்களூரு போன்ற பெரும் நகரங்களில் மிகவும் சிரமமான விஷயங்களில் ஓன்று போக்குவரத்துக்கு நெரிசல். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மிகவும் சிரமப்படவேண்டிய சூழல். பயணம் என்றாலே பேருந்து, ரயில் அல்லது ஆட்டோ இப்படிதான் இருந்தது. ஆனால் சாதாரண மக்களும் தங்கள் பயணத்திற்கு கார் மூலம் செல்லலாம் என்ற வசதியை மிகவும் எளிதாக கொண்டுவந்தது ஓலா கால்டாக்சி நிறுவனம்.
சாதாரண மக்கள் கூட கார் மூலம் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கு ஓலா ஒரு முக்கிய காரணம். இன்று பேருந்து, ரயில், ஆட்டோ போன்று ஓலா வும் ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இந்நிலையில் ஓலா நிறுவனம் செய்த ஒரு தவறால் அடுத்த ஆறு மாதத்திற்கு பெங்களுருவில் ஓலா கால்டக்சிகளை இயக்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் ஓலா தனது பைக் டாக்சியை அறிமுகம் செய்தது. பைக்கை வணிக ரீதியாக இவ்வாறு பயன்படுத்த முடியாது என்பதாலும், ஓலாவிற்கு வழங்கப்பட விதிமுறைகளை அந்நிறுவனம் மீறிவிட்டதாகவும் கூறி அடுத்த ஆறு மாதத்திற்கு பெங்களுருவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.