இனி கார் வாங்கவே தேவை இல்லை! ஓலாவின் புது அறிவிப்பால் செம குஷியில் வாடிக்கையாளர்கள்.
OLA introduce self driving car from October 17
மக்களுக்கான அத்தியாவசிய போக்குவரத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது ஓலா மற்றும் உபர் போன்ற நிறுவனங்கள். இந்த நிறுவனங்களால் கார் உற்பத்தி துறையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறப்படும் நிலையில் இனி காரே வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுபோல் புது சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஓலா நிறுவனம்.
செல்ப் டிரைவிங் கார். நீங்கள் ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் 2 மணி நேரத்திற்கு முன்னதாக 2000 பணத்தை டெபாசிட் செய்துவிட்டு உங்களுக்கு பிடித்த காரை எடுத்துக்கொண்டு நீங்களே ஒட்டி செல்லலாம்.
இதுபற்றி கூறியுள்ள ஓலா நிறுவனம் இதன் முதல் கட்டமாக இந்த சேவையை அக்டோபர் 17 முதல் பெங்களூருவில் தொடங்கி இருப்பதாகவும் வரும் 2020 குள் 20 ஆயிரம் கார்களுக்கு மேல் இந்த சேவையில் இறக்கி, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியுள்ளது.
முக்கிய குடியிருப்புகள், நகரின் முக்கிய பகுதிகளில் இருக்கும் சேவை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.