பழைய ஓட்டுநர் உரிமம் இனி செல்லாது? நாடு முழுவதும் புது ஓட்டுநர் உரிமம்!
Old driving license are gonna expire new license from 2019
இந்தியாவை பொறுத்தவரை ஒவொரு மாநிலங்களிலும் வெவ்வேறு விதமாக ஓட்டுநர் அடையாள அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சீர் செய்து, நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் அடையாள அட்டையை அறிமுகம் செய்யவுள்ளது இந்திய அரசு. மேலும் தற்போது உள்ள ஓட்டுநர் உரிமத்தில் அந்த அந்த மாநிலத்தின் பெயர் இடம்பெற்றிருக்கும். தற்போது அதனை மாற்றி இந்திய யூனியன் என அச்சிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஓட்டுநர் உரிமத்தில் தமிழ்நாடு என்பது இந்திய யூனியன் என்ற மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்படும். மேலும் பழைய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் அதை கட்டாயம் மாற்றி, புது ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும் என்பது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை ஓட்டுநர் அடையாள அட்டை பற்றி நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அதிகாரிகளிடமும் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அதன் அடிப்படையிலையே இந்த புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
புதிய ஓட்டுநர் உரிமம் 2019 ஜூலை மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. மேலும் இந்தப் புதிய கார்டுகள் கண்டிப்பாக ஸ்மார்ட் கார்டுகளாகத் தான் இருக்கும், QR குறியீடு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.