இளைஞனை கடத்திச் சென்று, மயக்கமருந்து கொடுத்து 50 வயது பெண் செய்த மோசமான செயல்.!
மத்திய பிரதேச மாநிலத்தில் வேளாண் துறை ஊழியர் ரிங்கேஷ் கேஷர்வானி என்ற 30 வயது நிரம்பிய வாலி
மத்திய பிரதேச மாநிலத்தில் வேளாண் துறை ஊழியர் ரிங்கேஷ் கேஷர்வானி என்ற 30 வயது நிரம்பிய வாலிபர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில், தனது அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக 50 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நீண்ட நாட்களாக என்னை நிர்பந்தித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 15ஆம் தேதி அந்த பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து என்னை தாக்க வந்தார். சில போலீசாருடன் கூட்டுச் சேர்ந்து என்னை பொய் வழக்கில் சிக்க வைக்கவும் முயன்றார். இதையடுத்து, ஜாபல்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்த சமயத்திலே நான் புகார் தெரிவித்திருந்தேன். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. இந்தநிலையில், கடந்த ஜூன் 16ம் தேதியன்று, அந்த பெண் தனது நண்பர்களின் உதவியுடன் கோஹல்பூர் காவல் நிலையத்திற்கு முன்னால், கத்தியை காட்டி மிரட்டி என்னை கடத்திச் சென்று அவரது உறவினர் வீட்டில் அடைத்து வைத்தார்.
இதனையடுத்து மறுதினம் கத்தி முனையில் என்னை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று 'மயக்க மருந்து' கொடுத்து மயக்க நிலையிலே, அவர் என்னை கட்டாயமாக தாலி கட்ட வைத்தார். பின்னர், அந்த பெண்ணின் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்து, அன்றைய தினமே, போலீசாருக்கு தகவல் கொடுத்தேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். எனவே அப்பெண் மீது நடவடிக்கை எடுப்பதோடு தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.