ஒரே மாதத்தில் ஏழை விவசாயியை கோடீஸ்வரனாக்கிய வெங்காயம்! மகிழ்ச்சியில் விவசாயி.
Onion karnataga
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மழை காலங்களில் மட்டும் வெங்காயம் பயிரிடுவதை வழக்கமாக கொண்டவர். அதில் எல்லா வருடமும் சுமாராக லாபம் பார்த்து வந்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் லாபம் சம்பாதித்துள்ளார். எனவே இந்த ஆண்டு தனது 10 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிர் செய்தது மட்டுமின்றி 10 ஏக்கர் குத்தகைக்கு நிலத்தை வாங்கி அதிலும் வெங்காயம் பயிரிட்டுள்ளார்.
அதற்காக அவர் 15 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி வெங்காயத்தை பயிரிட்டுள்ளார். அவர் எண்ணியது போல் இந்த ஆண்டு வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே ஏழை விவசாயி மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.
அதுமட்டுமின்றி வெங்காயம் பயிரிட வாங்கிய அனைத்து கடனையும் அடைத்து விட்டாராம். மேலும் இனி வரும் லாபத்தில் தனது கிராமத்தில் வீட்டை கட்ட திட்டம் செய்துள்ளார் மல்லிகார்ஜுன்.
மேலும் இவர் தனது வயலில் வெங்காய திருட்டை கட்டுப்படுத்த 50 பேரை வேலைக்கு நியமித்துள்ளார் மல்லிகார்ஜுன்.