கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம்! முண்டியத்து கொண்டு செல்லும் மக்கள் - வைரலாகும் வீடியோ.
Onion one kg 25 rupee in anthira
இன்று இந்தியா முழுவதும் காணக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளுள் ஒன்று வெங்காய விலை உயர்வு. இதற்கு காரணம் தொடர் மழை மற்றும் சரியான விளைச்சல் இல்லாதது தான் முக்கிய காரணம். மேலும் சில நாட்களுக்கு முன் வரை ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை ஆனது.
ஆனால் தற்போது வெங்காயம் விலை ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாமர மக்கள் வெங்காயத்தை வாங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறுகையில்: மகாராஷ்டிரத்தில் மீண்டும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இது குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தான் வெங்காயம் சாப்பிடுவது கிடையாது. அதனால் வெங்காய உயர்வை பற்றி கவலையில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதனை வாங்க மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.