கேஸ் சிலிண்டரின் விலை குறைவே தேர்தல் வருவதற்கான அறிகுறி! பா. சிதம்பரம் விமர்சனம்!!
கேஸ் சிலிண்டரின் விலை குறைவே தேர்தல் வருகிறதற்கான அறிகுறி! பா. சிதம்பரம் விமர்சனம்!!
'கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி' பா. சிதம்பரம் விமர்சனம்.
வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களின் மாதந்தோறும் உயர்ந்து வந்த நிலையில், அதன் விலையில் ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.400 குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியானது.
இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் பா. சிதம்பரம் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது:-
"தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி!
ரூ1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்!
வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!" என்று அவர் தெரிவித்திருந்தார்.