தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பப்ஜி காதலால் இந்தியா வந்த பாக். பெண் பகீர் வாக்குமூலம்.. காதலனுக்காக சொத்துக்களை விற்று இந்தியா வந்து கம்பி எண்ணும் பரிதாபம்.!

பப்ஜி காதலால் இந்தியா வந்த பாக். பெண் பகீர் வாக்குமூலம்.. காதலனுக்காக சொத்துக்களை விற்று இந்தியா வந்து கம்பி எண்ணும் பரிதாபம்.!

Pak Women Illegal Entry In India Pubg Love Life Ends Jail  Advertisement

 

பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும், இந்தியாவை சேர்ந்த சச்சின் சிங் என்ற இலங்கைக்கும் இடையே பப்ஜி கேம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. 

4 குழந்தைகளின் தாயான சீமா, தனது காதலருடன் இந்தியாவில் சேர்ந்து வாழ நினைத்துள்ளார். இதனையடுத்து, இந்தியாவுக்குள் அரசுக்கு தெரியாமல் செல்வது எப்படி என யூடியூபில் பல்வேறு விடீயோக்களை பார்த்துள்ளார். 

பின்னர், நேபாளம் வழியே செல்ல அவர் திட்டமிட்டு, தனது பெயரில் இருந்த சொத்துக்களை விற்பனை செய்து ரூ.12 இலட்சம் பணம் சேமித்துள்ளார். இந்த பணத்தை வைத்து தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேபாளம் வந்துள்ளார். 

Pakistan

அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பெண்மணி, தனது குழந்தைகளோடு காதலரை சந்தித்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், மகனின் காதலுக்கு சச்சினின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக தெரியவருகிறது.

உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விசாரணை செய்து சீமா ஹைதர், அவரின் இந்திய காதலர் சச்சின் சிங், அவரின் தந்தை ஆகியோரை கைது செய்தனர். குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

தான் நிலத்தை விற்பனை செய்து, யூடியூபில் வீடியோ பார்த்து இந்தியா வந்த நிகழ்வை அதிகாரிகளிடம் வாக்குமூலமாக பெண்மணி பதிவு செய்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pakistan #Love #pubg #India #Nepal #Illegal Entry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story