குடிகார மகனை கூலிப்படை ஏவிக்கொன்ற பெற்றோர்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் பரபரப்பு பின்னணி..!!
குடிகார மகனை கூலிப்படை ஏவிக்கொன்ற பெற்றோர்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் பரபரப்பு பின்னணி..!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பத் கிராமத்தில் வசித்து வருபவர் ராம்சிங். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ராம்சிங்கன் மனைவி ராணி பாய். இந்த தம்பதிக்கு சாய்ராம் என்ற மகன் இருக்கிறார். 26 வயதாகும் இவர், வேலைக்கு செல்லாமல் மதுபானம் அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி ஊரைசுற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் அவ்வப்போது மதுபானம் குடிக்க பணம்கேட்டு பெற்றோரையும் அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இந்த நிலையில், மகனின் தொடர் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெற்றோர் இப்படியான ஒரு கொடுமை மிகுந்த மகன் தங்களுக்கு தேவையில்லை என்று முடிவெடுத்து மகனை கொலைசெய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 18 சாய்ராம் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் மேற்கூறிய பகீர் தகவலானது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து அவரின் பெற்றோரை கைது செய்த காவல்துறையினர் கூலிப்படையையும் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்காக கூலிப்படைக்கு ரூ.8 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதும் விசாரணையில் அம்பலமானது.