சூர்யகிரகணத்தின்போது மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Parents put kids into sand
இன்று தோன்றிய சூரிய கிரகணம் உலகின் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது. தமிழகத்தில் காலை தொடங்கி 11.14 வரை கிரகணம் நீடித்தது. பொதுவாக இதுபோன்ற கிரகணத்தின்போது நரபலி கொடுப்பது, மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை சினிமாவில் நடப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
அதேபோன்று, பிஞ்சு குழந்தைகைளை அவர்களது பெற்றோர் மண்ணுக்குள் குழிதோண்டி கழுத்து வரை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிய கிரகணம் நடைப்பெறும் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்து வரையில் மண்ணிற்குள் புதைத்து வைத்தால், அவர்களின் குறைபாடு சரியாகி விடும் என்ற மூடநம்பிக்கை கர்நாடக கிராம மக்களிடையே இருந்து வருகிறது.
இன்று சூரியகிரகணம் என்பதால் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதை அடுத்து பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அந்த பகுதி தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு குழந்தைகளின் பெற்றோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.