காவலர்களுக்கே காவலர்களாய் மாறிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்! பதான் சகோதரர்களுக்கு குவியும் பாராட்டு!
pathan brothers bought vitamin c to vadodara police
ஊரடங்கு பாதுகாப்பில் இருக்கும் வதோதரா காவலர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு யூசுப் மற்றும் இர்பான் பதான் சகோதரர்கள் விட்டமின் சி மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளனர்.
கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே வழி மக்கள் வீட்டிற்குள்ளே இருப்பது தான் என்பதால் அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.
அரசின் இந்த உத்தரவை தெருக்கோடி குடிமக்களையும் கடைபிடிக்க வைக்கவேண்டும் என அணைத்து மாநில காவல்துறையினரும் போராடி வருகின்றனர். கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற இரவு பகல் பாராமல் காவலர்கள் உழைக்கின்றனர்.
ஓய்வே இல்லாமல் உழைத்து வரும் காவலர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த கோடைகாலத்தில் மிகவும் சோர்வடைவார்கள் காவலர்கள். இதனை உணர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான யூசுப் மற்றும் இர்பான் பதான் சகோதரர்கள் தங்களால் முடிந்த உதவியினை காவலர்களுக்கு செய்துள்ளனர்.
வடோதராவில் தங்கியுள்ள இவர்கள் வடோதராவை சேர்ந்த காவல் துறையினருக்கு தேவையான விட்டமின் சி மாத்திரைகளை வாங்கி அந்த நகரின் கமிஷனர் அனுபம் சிங்கிடம் வழங்கியுள்னர். இதற்கு வதோதரா போலீசார் சார்பாக பதான் சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.