இனி எவனும் இப்படி செய்யக்கூடாது, பெண்களிடம் சில்மிஷம் செய்த இளைஞருக்கு தக்க பாடம் புகுத்திய பொதுமக்கள், என்ன தெரியுமா?
people gave punishment to sex abused man
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை ஊர்மக்கள் சேர்ந்து மொட்டை போட்டு கரும்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபாப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் வசித்து வருபவர் வாகீல். இவர் அப்பகுதி இளம்பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி பல பெண்களின் புகைப்படங்களை தனது புகைப்படத்துடன் சேர்த்து ஆபாசமாக மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக வாகிலை அப்பகுதி மக்கள் பலமுறை கண்டித்தும் அவன் அதை பொருட்படுத்தாமல் திரும்ப திரும்ப அவ்வாறே செய்து வந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வாகீலுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி குத்தி ஊருக்குள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மேலும் இது தொடர்பாக வாகீலின் குடும்பத்தினர், வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட கலெக்டர் சந்திரபூஷன் சிங்கிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள கலெக்டர் விடுத்த உத்தரவின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஊர்மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர் ஊர்மக்கள் வாகீலின் நடவடிக்கைகள் குறித்து அளித்த புகாரை தொடர்ந்து வாகீலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.