பெட்ரோல், டீசல் விலை ₹5 முதல் ₹6 வரை அதிகரிக்க வாய்ப்பு - காரணம் என்ன தெரியுமா?
Petrol diesel velai uyarvu
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக வந்த தகவல் படி சவுதி அரேபியாவில் உள்ள அரோம்கோ நிறுவனத்தின் அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.இதன் எதிரொலியாக அடுத்துவரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை உயரக்கூடும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.