விளையாட சென்ற சிறுவனை கொடூரமாக கொன்ற பன்றிகள்! அதிர்ச்சி சம்பவம்!
Pig killed young boy
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 4 வயது சிறுவனை அந்த வழியாக சென்ற காட்டுப்பன்றிகள் சிறுவனை தாக்கி இழுத்துச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிங்காரேனி காலனியில் வசித்து வந்த ஹர்ஷவர்தன் என்ற 4 வயது சிறுவன், விளையாடுவதற்காக தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற காட்டுப்பன்றிகள் சிறுவனை தாக்கி இழுத்துச் சென்றுள்ளது. மேலும் சிறுவனின் உடலின் சில பாகங்களையும் சாப்பிட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் சடலத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் சிறுவனின் பெற்றோர்களும் அங்கு விரைந்து குழந்தையை அடையாளம் கண்டுள்ளனர்.
இதற்கு முன்பே அப்பகுதியில் வசிப்பவர்கள் காட்டுப் பன்றிகள் சுற்றிதிரிவது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் பாலாலா ஹக்குலா சங்கம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இதுகுறித்து புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.