ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் இலவசமாக பெற, இதனை செய்தால் போதும்! அனைவர்க்கும் பகிருங்கள்!
Platform ticket free in delhi station
டெல்லி ரெயில் நிலையத்தில் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்பார டிக்கெட் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலையிலும், மாலையிலும் தோப்புக்கரணம் போட்டாலே போதும். வேறு எந்தவிதமாநன உடற்பயிற்சியும் தேவையில்லை. தோப்புக்கரணம் அந்த அளவிற்கு உடலுக்கு மிகச்சிறந்தது. இந்தநிலையில், டெல்லியில் தோப்புக்கரணம் போட்டால், பிளாட்பார டிக்கெட் இலவசமாக தரும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திரம் உள்ளது. அந்த எந்திரத்தின் முன்பு 30 தோப்புக்கரணம் போட்டவுடன், உடனே அந்த எந்திரம் பிளாட்பார டிக்கெட்டை வழங்குகிறது.
இந்த விஷயத்தை இந்திய மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், இந்த எந்திரம் குறித்த வீடியோவை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். இதனால் தோப்புக்கரணம் போடுவது, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதால், அதுகுறித்த விழிப்புணர்வுக்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.